Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ... மேட்டுப்பாளையத்தில் குண்டம் திருவிழா மேட்டுப்பாளையத்தில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப். 25ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஏப்
2013
10:04

மதுரை: மதுரை, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, ஏப்., 23ல், அழகர் மலையில் இருந்து புறப்பட்டு, மதுரைக்கு கள்ளழகர் வருகிறார். ஏப்., 25ல் காலை, 7:45 மணிக்கு, ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது. வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, ஏப்., 23ல், மாலை, 5:30 மணிக்கு, கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல் கம்புடன், கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜ பெருமாள், மதுரை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு, திருக்கண் மண்டகப் படிகளில் எழுந்தருளி, ஏப்., 24ம் தேதி காலை, மதுரைக்கு வருகிறார். அன்று காலை, 6:00 மணிக்கு, மூன்று மாவடியில் பக்தர்கள் எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு புதூரிலும், மாலை, 6:00 மணிக்கு அவுட்போஸ்ட்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வரும் கள்ளழகருக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. இரவு, 2:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மூன்று மணிக்கு, தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

வைகை ஆற்றில் இறங்குகிறார்: வரும், 25ம்தேதி, தங்கக் குதிரையில், காலை, 7:31 மணிக்கு மேல், 7:45 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்குகிறார். பின் அங்கிருந்து புறப்படும் அழகர், காலை, 11:00 மணிக்கு, ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு அவருக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு செல்கிறார். வரும், 26ம் தேதி காலை, சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,27ம் தேதி காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகருக்கு, அன்று நள்ளிரவு, தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில், பூப்பல்லக்கு நடக்கிறது. ஏப்., 29ம் தேதி அழகர்கோவிலை சென்றடைகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar