பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில் 37 வது ஆண்டு பிரமோற்சவ விழா, ஏப்., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 10 ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. மறுநாள் காலை கோயிலில் கொடியேற்றப்படும். ஏப்., 17 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு ரத உற்சவத்தில் சுவாமி வரும் வருவார். ஏப்., 19 ல் ஸ்ரீராமஜெனனம்உற்சவம், மறுநாள் புஷ்ப யாகம், உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.தினமும் மாலை சக்கரத்தாழ்வார் சுவாமி புறப்பாடுடன், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வாகனங்களில் வீதிவுலா வருவர். ஏற்பாடுகளை தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி அருள்செல்வன், ஊழியர் பூபதி செய்கின்றனர்.