பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 37வது ஆண்டு பிரம்மோத்சவ விழா வரும் 16ம் தேதி துவங்கு கிறது. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவ விழா நடக்கும். இந்தாண்டுக்கான விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு, அனுக்ஞை, புண்யாகவாஜனம், வாஸ்துசாந்தி, மிருத்ஸங்கிருகணம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி, வரும் 17ம் தேதி மாலை 5.00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 18ம் தேதி அன்னபட்சி வாகனத்திலும், 19ம் தேதி அனுமன் வாகனத்திலும், 20ம் தேதி சேஷ வாகனத்திலும், 21ம் தேதி கருட வாகனத்திலும், 22ம் தேதி யானை வாகனத்திலும் எழுந்தருளும் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 24ம் தேதி குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா இடம்பெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 25ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு திருவீதி உலாவும் நடக்கவுள்ளன. வரும் 26ம் தேதி, காலை 6.00 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 3.30 மணிக்கு துவாதச ஆராதனமும், மாலை 6.00 மணிக்கு புஷ்பபல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 7.00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன், பிரம்மோத்சவ விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில், செயல் அலுவலர் வெண்மணி, தக்கார் அனிதா ஆகியோர் செய்கின்றனர்.