Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேம்பு மாரியம்மன் கோவிலில் ஏப்.,12ல் ... ஒற்றுமை ஓங்கட்டும்: இன்று தெலுங்கு புத்தாண்டு! ஒற்றுமை ஓங்கட்டும்: இன்று தெலுங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகையே வென்ற.. மாவீரர் அலெக்சாண்டரின் வெற்றி ரகசியம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
04:04

உலகையே வென்ற மாவீரர்  அலெக்சாண்டர். அவர் உலகை ஜெயித்தது வீரத்தால் மட்டுமல்ல! இன்னொரு ரகசியமும் அவரது வெற்றிக்குப் பின் புதைந்து கிடக்கிறது. அலெக்சாண்டரை ஒரு பேரறிஞர் சந்தித்தார்.மாவீரரே! உங்களுக்கு முன்பு இந்த தேசத்தை ஆண்ட அரசர்கள் பலர் உங்களை விட வலிமை வாய்ந்த படைகளுடன் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், உங்களை விட பலமடங்கு பணமும் அவர்களிடம் கொட்டிக் கிடந்திருக்கிறது. ஆனால், அவர்களால் உலகை வெல்ல முடியவில்லை. நீங்கள் அவர்களை விட வலிமை குறைந்தவராயினும் உங்கள் வெற்றியின் ரகசியம் எனக்குப் புரியவில்லை. அதை வெளிப்படுத்துவீர்களா? என்றார்.அலெக்சாண்டர் மென்மையாக ஒரு புன்முறுவலை உதிர்த்தபின் பதிலளித்தார். அறிஞர் பெருமகனாரே! இதில் ரகசியம் ஏதுமில்லை. எனக்கு இந்த வெற்றி கிடைக்க காரணமாக இருந்தவர் கடவுள் மட்டுமே! அவரது அருள் பரிபூரணமாக எனக்கு கிடைத்தது. அதனால் நான் வென்றேன்.

நான் வென்ற நாடுகளில், ஏற்கனவே இருந்த ஆட்சிகள் ஓரளவுக்கே நல்லாட்சியை தந்தனர். மக்களின் எதிர்பார்ப்பு அந்த ஆட்சியாளர்களிடம் ஏராளமாக இருந்தது. அவற்றையெல்லாம் நான் சிறப்பாக நிறைவேற்றினேன். மக்கள் யார் ஆள்கிறார்கள் என்பது பார்ப்பதில்லை. தங்களைப் புரிந்து கொண்டு, தங்களுக்கு வேண்டியதைச் செய்யும் ஆட்சியாளர்களையே விரும்புகிறார்கள். அவ்வகையில், முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பான ஆட்சியையும், நிறைந்த வசதிகளையும் செய்து கொடுத்தேன். அந்த நாட்டு ஆட்சியாளர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக, அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் நான் நடக்கவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தேன். இதுவே நான் வெற்றிப்படிக்கட்டில் கால் வைத்த ரகசியம், என்றார்,உலகெங்கும் நல்லாட்சி மலரட்டும். மக்களின் தேவை நிறைவேறட்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் மனநிலை மக்களிடம் வளரட்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar