பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் பூக்குழி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் அம்மன், சிங்கம், காம தேனு, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. பூக்குழி விழாவான நேற்றுஅதிகாலை, தீ வளர்த்தலை தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, பூக்குழி இறங்குவதற்கான காப்பு சீட்டு பெற்றனர். பூக்குழி இறங்கிய பக்தர்கள் கோயிலிலிருந்து புறப்பட்டு, நான்கு ரதவீதிகளை சுற்றியப்படி, வரிசையில் காத்திருந்தனர். மதியம் 1.35 மணிக்கு அம்மாள் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர். 200க்கு அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். விழாவை தொடர்ந்து இன்று காலையில் தேரோட்டம் நடக்கிறது.