பங்குனி உத்திர திருவிழா பழநியில் ரூ.5.81 கோடி வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2013 11:04
பழநி: பழநி கோயிலில் பங்குனி உத்திர விழாவை யொட்டி 5 கோடியே 81 லட்சம் ரூபாய் வசூலானது. பங்குனி திருவிழா கடந்த மார்ச்ல் 20ல் கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 29 வரை நடந்தது. இந்த திருவிழாவின் போது கிடைத்த வசூல் விபரம்: வின்ச் மூலம் ரூபாய் 12 லட்சத்து 28 ஆயிரமும், தங்தத்தொட்டில் மூலம் ரூபாய் 12 லட்சத்து 34 ஆயிரமும், காவடி காணிக்கை மூலம் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், ரோப்கார் மூலம் 77 ஆயிரத்து 275 ரூபாயும் வசூலானது. பஞ்சாமிர்த விற்பனை, தரிசன, தங்கரத, அர்ச்சனை, அபிஷேக, முடிக்காணிக்கை டிக்கெட்கள் விற்பனை என மொத்தம் ரூபாய் 3 கோடியே 91 லட்சத்து 85 ஆயிரம் வசூலாகியுள்ளது. இது தவிர உண்டியல் வசூல் ரூபாய் 1.90 கோடியாகும். மொத்தத்தில் பங்குனி உத்திர திருவிழாவில், ரூபாய் 5 கோடியே 81 லட்சம் வசூலானது.