பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
10:04
குமாரநல்லூர்: கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், குமாரநல்லூரில் உள்ள தேவி கோவிலில், காத்யாயனி அம்மனுக்கு, "சுவர்ண கஜம் அர்ப்பணிக்கப்பட்டது.108 தலங்களில் ஒன்றுவரலாற்றுப் புகழ் பெற்றதும். 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, குமாரநல்லூர் காத்யாயனி தேவி கோவில், இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, 108 துர்கை அம்மன் திருத்தலங்களில் ஒன்று.இந்தக் கோவிலின் அருகாமையில் உள்ள கிராமத்தில் வசித்த இரு பிரிவினரிடையே, 300 ஆண்டுகளுக்கு முன், திடீரென பகை ஏற்பட்டது. அந்த காலத்தில், பெண்கள் சொல்வதை, ஆண்கள் கேட்காத நிலை ஏற்பட்டது.
இப்பிரச்னையை தீர்க்க, காத்யாயனி அம்மனால் மட்டுமே முடியும் என, அவ்வூர் பெண்கள் நம்பினர். அம்மன் மீது, பஜனைப் பாடல்களை பாடினர். இதற்கு, நல்ல பலனும் கிடைத்தது.இதையடுத்து, கோவில் நிர்வாகிகள், அம்மனை ஊர்வலமாக அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதாவது, பிரச்னை எங்கு தொடங்கியதோ அந்த இடத்தை நோக்கி, காத்யாயனி அம்மனை, யானை மீது அமர வைத்து, ஊர்வலமாக அழைத்து செல்ல முடிவு செய்தனர். இந்த விழா, மீனம் மாதத்தில், பூரம் நட்சத்திரம் அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த ஊர்வலம், கோவிலின் கிழக்கு வாயிலில் நுழைந்தவுடன், பிரச்னைக்கு காரணமான இரண்டு பிரிவு தலைவர்கள், தங்களுக்கு இடையிலான சண்டை, முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, இந்த ஊர்வலம், கோவில் நுழைவாயிலில் நுழைந்தது. இதில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தங்களின் கைகளில், திருவிளக்கை ஏந்தி வந்தனர். மோதலால், கிராமத்தினர் இழந்த மகிழ்ச்சி, அமைதி ஆகியவை, அன்றைய தினம், திரும்பவும் அவர்களுக்கு கிடைத்தது.பிள்ளையாருக்கு பதில்...ஒவ்வொரு ஆண்டும், இதற்கான திருவிழா, குமாரநல்லூரில் நடக்கிறது. உயிருள்ள யானைக்கு பதிலாக, தங்கத்தால் ஆன, பிள்ளையார் முகத்தை, தேவிக்கு சமர்ப்பித்த வருவதை, சம்ப்ரதாயமாகக் கொண்டிருந்த கிராமத்தினர், இவ்வாண்டு, ஒரு அடி உயரமுள்ள தங்கயானையைச் செய்துள்ளனர்.கடந்த மார்ச் 26ம் தேதி நடைபெற்ற பூரம் திருவிழாவில், அம்மனுக்கு தங்க யானை சமர்ப்பிக்கப்பட்டது.