பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
02:04
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமுள்ள மிதுன ராசி அன்பர்களே!
இந்தமாதம், உங்கள் ராசிநாதன் புதன் அனுகூல அமர்வு பெற்றுள்ள பதினொன்றாம் இடத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேதுவும் ஐந்துகிரக சேர்க்கையாக அமைந்து அளப்பரிய நற்பலன்களை தருகின்றனர். சாந்த குணத்துடன் பேசி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வும், மகிழ்ச்சியும் உருவாகும். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை அதிக செலவில் வாங்கித்தருவீர்கள். வீடு, வாகனம் வாங்கவும் யோகம் உண்டு. உடல்நிலை பலம்பெறும். தம்பதிகள் புரிந்து நடந்து குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலையை உருவாக்குவர். மனதில் பெருமிதமும், வாழ்வில் கூடுதல் நம்பிக்கையும் ஏற்படும். நண்பர்கள் ஆயிரம் ரூபாய்க்கு உதவினால் ஐயாயிரம் ரூபாய் உதவியை எதிர்பார்ப்பார்கள். வெளியூர் பயணம் இனிதாக அமைந்து புதிய அறிமுகம், அனுபவங்களை பெற்றுத்தரும். தொழிலதிபர்கள், தகுந்த மூலதனத்தில் அபிவிருத்திபணி மேற்கொள்வர். வியாபாரிகள், விற்பனையில் புதிய சாதனை இலக்கை அடைவர். பணியாளர்கள், குறித்தகாலத்தில் வேலையை முடித்து, பாராட்டு, வெகுமதி பெறுவர். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். விரும்பியபடி ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள், உற்சாகத்துடன் செயல்பட்டு பணிக்கு பெருமைசேர்த்திடுவர்,விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், கணவர், தோழியின் உதவியால் புதிய ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அரசியல்வாதிகள் பொறுப்பான பதவி கிடைத்து அரசாங்க அனுகூலம் பெறுவர். விவசாயிகளுக்கு அதிக மகசூல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் தேர்ச்சியும், தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றமும் காண்பர்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 1.5.13 மதியம் 2.10 -3.5.13 மாலை 4.15.
வெற்றி நாள்: ஏப்ரல் 21, மே 9,10
நிறம்: மஞ்சள், சிவப்பு
எண்: 1,3