தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் கடகராசி அன்பர்களே!
இந்தமாதம், உங்கள் ராசிக்கு ஐந்து கிரக சேர்க்கையாக பத்தாம் இடத்தில் இடம் பெற்றுள்ள கிரகங்களில் சூரியன், புதன் மட்டுமே நல்ல பலன்களை தருகின்றனர். ஆதாயஸ்தானத்தில் உள்ள குருவும் தன் பங்கிற்கு சிறப்பான பலன்களை வழங்குகிறார். உங்களின் எண்ணமும், செயலும், வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான வழிகளை உருவாக்கும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவுக்கு பேச்சில் நிதானம் பின்பற்ற வேண்டும். பூர்வசொத்து பராமரிப்பதில் நம்பகமானவர்களுக்கு இடம் தருவதால் மட்டுமே சிரமம் எதுவும் வராமல் தவிர்க்கலாம். இஷ்டதெய்வ வழிபாடு நடத்தி மனதிருப்தி கொள்வீர்கள். புத்திரர்களின் சிரமம் தருகிற செயல்களை சரிசெய்வதில் நிதானத்துடனும், அன்புடனும் நடந்து கொள்வது நல்லது. எதிரிகள் உங்களைக் கவிழ்க்க திட்டமிடுவர். உடல்நலம்பாதிக்கலாம். உங்களுக்கு வர வேண்டிய கடன்பாக்கியை சமயோசிதமாக வசூலித்து விடுவீர்கள். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரிக்க நிர்வாகத்தில் சில மாறுதல்களைச் செய்வார்கள். லாபம் ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்து விற்பனையில் முன்னேற்றமும்,ஓரளவு பணவரவும் பெறுவார்கள். பணியாளர்கள், தொழில் நுட்பங்களைத் தெளிவாகக் கற்று வேலைகளை சீக்கிரம் முடிப்பர். ஆனால், சலுகைகள் கிடைக்க தாமதமாகும். குடும்பப் பெண்கள், அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனையின் அளவை ஓரளவு உயர்த்துவர். லாபம் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள், இனிய அணுகுமுறையால் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திட்டங்களை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வகையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மாணவர்கள் படிப்பில் பின்தங்கலாம். பெற்றோர் ஆசிரியரின் கண்டிப்பு வராத வகையில் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதால் சிரமங்கள் குறைந்து நல்ல நிலைக்கு வருவீர்கள். உஷார் நாள்: 3.5.13 மாலை 4.52- 5.5.13 இரவு 10.20. வெற்றி நாள்: ஏப்ரல் 23,24 நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5,6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »