பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
10:04
ஜம்மு: ஒன்பது ஆண்டு தேடுதலுக்குப் பின், 11 ஆயிரம் அடி உயரத்தில், பழமையான குகைக் கோவிலை, முஸ்லிம் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் உள்ள பீர்பஞ்சால் என்ற இடம், கடல் மட்டத்தில் இருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.இப்பகுதியில் குகைக்கோவில் இருக்கக்கூடும் என, மாநிலத்தின் அனைத்து கோவில்களையும் பராமரிக்கும், ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டது. இதையறிந்த குர்ஷித் என்ற முஸ்லிம், ஒன்பது ஆண்டுகளாக தேடி, பழமையான குகைக்கோவிலை கண்டுபிடித்துள்ளார். இந்த குகைக்கோவிலில், சிவலிங்கம், சில சிலைகள், பழங்கால நாணயங்கள் உள்ளன. வரும் நவராத்திரி முதல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.