சாத்தூர்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்குபூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டு அதிகாலையில் வெங்கடாசலபதி, தாயார், ஆண்டாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 7 மணிக்கு நடந்த சிறப்பு திருவிளக்கு பூஜையில் ஜோதிடர் சேவியர் பேசினார். இதன் பின்னர் இரவு 8.30 மணியளவில் பெரியகருடாழ்வார் வாகனத்தில் வெங்கடாஜலபதி சித்திரை திருவீதியுலா நடந்தது. கோயில் செயல் அலுவலர் சுவர்ணாம்பாள், மற்றும் அலுவலர்கள், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.