பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
11:04
சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன்-பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு 11 ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 14 ல் விக்னேஷ்வர பூஜை, ரக்ஷா பந்தன நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 10 மணி க்கு கோயிலில் கொடி ஏற்றபட்டு திருவிழா துவங்கியது. மாலையில் சுவாமியும், அம்மனும் ஏக சப்பரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பதினெட்டு நாட்கள் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகப்படிகள் நடைபெறும். இந்நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன், சுவாமி, சுப்ரமணியர் அன்ன வாகனம், மயில் வாகனம், பூதவாகனம், சிம்மவாகனம், புஷ்ப பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் அழகர் திருக்கோலத்தில் ஆற்றில் எழுந்தருளல், கருட வாகன பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கிடையில், 22 ம் தேதி திருக்கல்யாணம், 23, 24ல் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 2ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது. கோயில் நிர்வாக அதிகாரி ரம்யசுபாஷினி, தக்கார் சுரேஷ், நகராட்சி தலைவர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.