பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலம் சிதம்பரம். இங்கு இறைவன் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய நிலைகளில் அருள்பாலிக்கிறார். உருவமாக நடராஜரும், அருவுருவமாக மூலட்டானேஸ்வரரும் இருக்கின்றனர். அருவநிலையில் இறைவன் இருப்பதைக் குறிக்கும் வகையில் கருவறையில் திரையிட்டிருக்கும். அதை நீக்கினால் தங்க வில்வமாலை இருக்கும். அண்ணாந்து பார்த்தால் ஆகாயம் தெரியும். இறைவன் ஆகாயம் போல் முதலும் முடிவுமில்லாதவன் என்பதே சிதம்பர ரகசியத் தத்துவம்.