தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன். இது தான் வேதம் சொல்லும் உறுதியான கருத்து. கடவுள் எங்கும் இருக்கிறார். எல்லாம் கடவுள் தான். ஊருக்கு நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ, செம்பையோ நட்டு அங்கே தான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக என்றால் சமுதாய ஒற்றுமை ஏற்படுவதற்காகத் தான். கோயில் வழிபாட்டால் ஊரில் ஒற்றுமை ஏற்படுகிறது. வீட்டில் எல்லாரும் சேர்ந்து வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை உண்டாகிறது.