பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
11:04
மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோவில், சித்திரைத் தேரோட்டம், கோலாகலமாக நேற்று நடந்தது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா. கடந்த, 6ம் தேதி, கொடியேற்றத்துடன், துவங்கியது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காலை, மூலஸ்தானத்திலிருந்து அம்பாள், தேரில் எழுந்தருளினார். முற்பகல், 11:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து பகல், 1:45 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக, அலகு குத்தியும், மொட்டையடித்தும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர்.