பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
10:04
திருச்சூர்: திருச்சூரில் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவும், புனித ஜோசப் திருவிழாவும் ஒரே நாளில் நடக்க உள்ளதால், அப்பகுதி களைகட்டியுள்ளது. கேரளாவின் திருச்சூர் நகரில், 21ம் தேதி, பூரம் திருவிழா நடக்கிறது. கடந்த ஆண்டு, 20 லட்சம் பேர் பங்கேற்ற இந்த திருவிழாவில், இந்த முறை யானைகள் ஊர்வலம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெயில் கடுமையாக இருப்பதால், யானைகள் ஊர்வலம் நடத்த, கேரள வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், நாளை நடைபெறும் திருவிழாவில், நிபந்தனைகள் தளர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.திருச்சூர் அருகே உள்ள பவரட்டி பகுதியில், கிறிஸ்தவர்களின், புனித ஜோசப் திருவிழாவும், நடப்பதால், அப்பகுதியே கோலாகலமாக உள்ளது. இதற்கு முன், 1999ல், இந்த, இரு பெரும் திருவிழாக்களும் ஒரே நாளில் நடந்தன. பூரம் திருவிழாவின் முக்கிய அம்சமான, யானைகள் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும், நாளை அதிகாலை துவங்கும், விமரிசையான, வாண வேடிக்கை நிகழ்ச்சி, வழக்கத்தை போலவே சிறப்பாக அமையும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர், இப்பகுதி மக்கள்.