பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
10:04
சென்னை: சத்யசாய் ஆராதனை மகோத்சவம், சென்னையில், நாளை (24ம் தேதி) நடக்கிறது. சாய்பாபாவின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி, சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள, பாபாவின் வாசஸ்தலமான சுந்தரத்தில், ஷீரடி சாய் மற்றும் சாய் சுந்தரேஸ்வரருக்கு வேதபாராயணத்துடன், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 8 முதல், 10 மணி வரை, சாய்பாபாவுக்கு இசை ஆராதனையாக, பஞ்சரத்ன கீர்த்தனைகளை, 108க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பாடுகின்றனர். 12 முதல் 1 மணி வரை , அன்னதானம் வழங்கப்படும். 4 முதல், 4.30 மணி வரை, பாபாவை பற்றிய வீடியோ தொகுப்புகள் திரையிடப்படும். 4.30 முதல், 5 மணி வரை, வேதபாராயண நிகழ்ச்சி நடக்கிறது. 5 முதல், 6 மணி வரை, சாய்பாபாவின் தெய்வீக செய்திகள் பற்றி, நீதிபதி, கற்பகவிநாயகம் சொற்பொழிவாற்றுகிறார். 6 முதல், இரவு 7 மணி வரை, சுந்தரம் பஜனை குழுவினரின் "சாய் பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு, மகா மங்கள ஆரத்திக்கு பின், பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ள சென்னையில் உள்ள சுந்தரம் கோவில் நிர்வாகம், அழைப்பு விடுத்துள்ளது.