பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
11:04
சென்னை: பஞ்சலோக சிற்பம் தயாரிக்கும், மூன்றாண்டு பயிற்சி திட்டத்தை, தமிழக அரசு, தஞ்சையில், துவக்குகிறது. தஞ்சை, சுவாமி மலையில், "குருகுலம் முறையில், பஞ்சலோக சிற்பம் தயாரிக்கும், மூன்று ஆண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கைத்திறன் தொழிலில் ஆர்வம் உள்ள, ஆறு இளம் கைவினைஞர்களுக்கு, பாரம் பரிய பஞ்சலோக சிற்பம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படும். பஞ்சலோக சிற்ப மையமான சுவாமிமலையில், மூன்று ஆண்டு பயிற்சி திட்டம், 30 லட்சம் ரூபாய் செலவில், 2013-14ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம், சிறப்பு கோவில் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. தங்கரதம், வெள்ளி ரதம், மரத்தேர், கொடி மரம் போன்றவற்றை தயாரிக்கிறது. இந்நிறுவனம், 2013-14ம் ஆண்டில், 2 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்ட பணிகளை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.