கும்பகோணம்: கும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் பச்சைக்காளி, பவழக்காளி, படுகள காட்சியும், பிறந்த வீட்டு அழைப்பும், வீதியுலாவும் நடந்தது.ம்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் உள்ள சுந்தரமகாகாளியம்மன் கோவிலிலில் 121 வது ஆண்டு பிரமோத்சவ விழா கடந்த 11ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும் 19ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், வேல்புறப்பாடும் நடந்தது.கோவிலிலிருந்து பச்øகாளியும், பவழக்காளியும் படுகளகாட்சியை கண்டனர். அப்போது கோவில் முன் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களுக்கு மஞ்சள்நீர் தெளித்து அவர்களுடைய பாவங்களை போக்கினர்.தொடர்ந்து பச்சைக்காளியும் பவழக்காளியும் ஊஞ்சல் உற்சவம் கண்டனர். பின்னர் பிறந்த வீட்டுக்கு செல்லும் வைபவம் நடந்தது. தொடர்ந்து வீதியுலா நடந்தது.நேற்றுறு 22 ம் தேதி இரவு 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன் பச்சைக்காளியும், பவழக்காளியும் பெரியதெருவில் வீதிவுலா வந்தது. இன்று 23ம் தேதி காலை 9 மணிக்கு பிறந்த வீடு சென்ற பச்சைக்காளியும், பவழக்காளியும் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.