வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2013 05:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் தையல் நாயகி சமேத வைத்தி யநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் தலமான இங்கு சுவாமியை வழிபட்டால் நோயற்ற வாழ்வை பெறுவர். வைத்தியநாதசுவாமியை குலதெய்வமாக கும்பிடும் ஒரு பிரிவினர் ஆண்டு தோறும் பங்குனி மாதம் விரதமிருந்து சித்திரை முதல் வாரம் பாதயாத்திரையாக கிளம்பி இரண்டாம் வாரம் செவ்வாய் கிழமை இக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுபோல காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த லட்கணக் கான பக்தர்கள் ஊர் எல்லையில் தங்கினர். தொடர்ந்து செவ்வாய் கிழமை காலை கோவிலுக்கு வந்த அவர்கள் தீர்த்த குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி சுவாமி, அம்பாள் மற்றும் அங்கஹாரனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து சிறப்பு பஸ்கள் இ யக்கப்பட்டன. சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு தலைமையல் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.