மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட் டைநாதர் கோவிலில் உள்ளது. இங்கு ஸ்ரீ திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் பிம்மோற்ச வ திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் சிறப்பாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி காலை சுவாமி அம்பாளுக்கு ராமு குருக்கள் சி றப்பு அபிஷேக, ஆராதணைகளை செய்து வைத்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூரத்திகளுடன் தேரில் ஏழுந்தருள ஏராளமான பக்தர் தேரை வடம் பிடித்திழுத்தனர். நாண்கு வீதிகளையும் வலம் வ ந்த தேர் மாலை நிலையை அடைந்தது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் சிர õப்பு செந்தில், சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் கோவில் ஊழியர்கள் செ ய்திருந்தனர். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.