திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 10.15 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் புறப்பாடு துவங்கியது. காலை 10.45 மணிக்கு, பெருமாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.05 மணிக்கு பட்டமங்கலம், மயில்ராயன்கோட்டை நாட்டார்கள் தேர் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது.