பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
11:04
சேலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமடைந்துள்ளது. சேலத்தில் இருந்து, 28 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தாரமங்கலம். கெட்டி முதலி என்று குறுநில மன்னரால், 13ம் நூற்றாண்டில் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு, பார்வதியை தாரை வார்த்து, திருமால் வழங்கியதால் தாரமங்கலம், என ஆயிற்று. தை மாத பிரம்மோற்சவ தேரோட்டம், கார்த்திகை தீபம், திருவாதிரை, அமாவாசை, பிரதோஷம், சித்திரை திருவிழா, பவுர்ணமி பூஜை ஆகிய விசேஷ நாட்களில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, 21, 22, 23 ஆகிய நாட்கள் சூரிய ஒளி இங்குள்ள லிங்கத்தின் மீது விழுவது சிறப்புக்குரியது.கடந்த, 1994ல் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட. அதன் பின், இந்தாண்டு இறுதியில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தற்போது, கும்பாபிஷேக பணிகள் தீவிரமடைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு வண்ணம் பூசப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. கோவிலுக்குள் உள்ள மூலவர் விமானம், நடராஜர், முருகன், அம்பாள், நந்தி மற்றும் முன் மண்டப விமானம், அவிநாசியப்பர் விமானம், சங்கரலிங்கம் விமானம் போன்றவை மராமத்து பணிகள் நடந்து வருகிறது.கோவிலை சுற்றி கருங்கற்களால் ஆன, ரிஷிபத்னி, பதஞ்சலி முனிவர், பிச்சாண்டவர், ஈஸ்வரன் ருத்ர தாண்டவம், ரதி மன்மதன் சிலைகள் உட்பட, 50 சிலைகள் உள்ளது. கோவிலில், இந்தாண்டு இறுதிக்குள் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்து விடும். கும்பாபிஷேக பணிகளுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கலாம்.