திண்டுக்கல்: திண்டுக்கல், அபிராமி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாளுக்கு 16 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தாடிக்கொம்பு சவுந்தரராஜா பெருமாள் கோயில் திருவிழாவின் ஒருபகுதியாக திண்டுக்கல் காசியா பிள்ளை பேட்டையில் உள்ள அபிராமி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிப்பட்ட பெருமாளுக்கு, 16 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.