பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
11:04
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல், இந்து அறநிலையத் துறையினர் முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டது. அதில், 17 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய், 14.1 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.நாமக்கல், கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் இருந்து, நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லுகின்றனர். கோவிலுக்குவரும் பக்தகர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.நேற்று கோவில் செயல் அலுவலர் சபர்மதி முன்னிலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. பக்தர்கள், கோவில் ஊழியர்கள் காணிக்கை தொகை, தங்கம், வெள்ளி போன்றவற்றை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, 17 லட்சத்து, 74 ஆயிரத்து, 85 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.அதுபோல், 14.1 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது கணக்கிடப்பட்டது. இதற்கு முன், பிப்ரவரி, 26ம் தேதி கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.