பதிவு செய்த நாள்
03
மே
2013
11:05
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள பெரியநாயகிபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பாலாபிஷேக விழா மற்றும் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. பண்ணையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் பெரியநாயகிஅம்மன் கோயில் பாலாபிஷேக விழா மற்றும் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் மாரியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவில் 30ம் தேதி அதிகாலையில் கும்ப பூஜை,கணபதிஹோமம், துர்க்கா பூஜை நடந்தது. தொடர்ந்து பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சிநடந்தது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் உச்சிகாலபூஜையும், கொடைவிழாவும் நடந்தது. மதியம் அன்னதானமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது. இரவு மாவிளக்கு, அக்னிசட்டி மற்றும் ஆயிரம் கண் பானை நேமிசம்எடுத்துவந்தனர். இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்று இரவு சாமக்கொடை நடந்தது. விழாவில் நேற்று காலை அம்மன் நகர்வலம் வரும் நிகழ்ச்சிநடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்யும், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், நடந்தது. இரவு தமிழ்நாடு பண்ணையார் குல இளைஞர் பேரவை சார்பிலும், தூத்துக்குடி மாவட்ட லட்சிய திமுக செயலாளர் சிம்புகண்ணன் சார்பில் இன்னிசை கச்சேரியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் தலைவர் மாரியப்பன், செயலாளர் சசிகுமார், பொருளாளர் மாரியப்பன், துணைத்தலைவர் ராஜா, துணைச்செயலாளர் ராஜேந்திரன், கௌரவத்தலைவர் சுப்பையா, மற்றும் நிர்வாகக் குழுவினர்கள் செந்தில்குமார், தனபால், கணேசன், சின்னத்துரை, ரமேஷ், ராஜா,காசி, கார்த்திக், கருப்பசாமி, ஐயப்பன், பக்கிரிசாமி, நாராயணன் உட்பட வரிதாரர்கள் செய்திருந்தனர்.