பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
நல்லதையே நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே!
ராசிக்கு மூன்றாம் இடத்திலுள்ள சூரியன் எப்போதும் இல்லாத சுறுசுறுப்பை தருவார். செல்வாக்கையும் பொருளாதார வளத்தையும் அள்ளித் தருவார். மூன்றாம் இட சுக்கிரன் குடும்பத்தில் மகிழ்ச்சி தருவார். தம்பதியரின் கருத்துவேறுபாட்டை போக்குவார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலத்தை மேம்படுத்துவார். அதோடு அவரது பார்வையாலும் நன்மை தருவார்.உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாய் 2-ம் இடத்தில் இருப்பதால், பொருள் களவு போக வாய்ப்புண்டு. ஜூலை 4 முதல் செவ்வாய் 3-ம் இடமான மிதுனத்திற்கு சென்று நன்மை தருவார். செவ்வாயின் 4-ம் இடத்துப் பார்வையாலும் அதிக நன்மை கிடைக்கும்.புதன் 3-ம் இடத்தில் இருப்பதால் பகைவர்களால் இடையூறு வரலாம். சனி, குரு. புதன், ராகு-கேது சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குருவின் பார்வை பலம் சாதமாக உள்ளது. பெண்கள் உறுதுணையாக இருப்பர். அழகு சாதன பொருட்கள் வாங்கலாம். ஜூலை 4க்கு பிறகு வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். குரு பார்வையாலும், சூரியனின் பலத்தாலும் வேலையில் பளிச்சிடுவீர்கள். அரசுப்பணியாளர்கள் வைத்த கோரிக்கை நிறைவேற சற்று தாமதம் ஆகலாம். தொழில் சிறப்படையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வீண் செலவு ஏற்படும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர். பெண்கள்ஆடம்பர பொருட்களை வாங்கலாம். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: செந்தூரம்,வெள்ளை.
நல்ல நாட்கள்: ஜூன் 17,18,19,20, 25,26,27,28,29, ஜூலை2,3,7,8, 14,15,16.
கவன நாட்கள்: ஜூன்21,22.
வழிபாடு: புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வணங்குங்கள்.