மும்பை: கடந்த 4 ஆண்டுகளில் ஷீரடி சாய்பாபா கோயிலில் ரூ.1009 கோடி காணிக்கையாக வசூலாகி உள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் ரூ.206 கோடி மட்டுமே காணிக்கையாக வசூலாகி உள்ளது. மகாராஷ்டிராவில் இந்த 2 கோயில்களில் தான் அதிகளவு காணிக்கை வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு மட்டும் ஆந்திராவின் திருப்பதியில் ரூ.1100 கோடி காணிக்கை வசூலாகி உள்ளது. ஷீரடியில் 10 மாதங்களில் காணிக்கை வசூல் 51 சதவீதம் உயர்ந்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.252 கோடிக்கும் அதிகமாகவே வசூலாகி வருகிறது.