காடும் காடும் சார்ந்த முல்லை நிலத்துக்குரிய தெய்வம் திருமால். எனவே தான், காட்டுப்பகுதியில் அதிகம் விளையும் துளசி இவருக்குரியதானது. திருமாலுக்கு வனமாலி என்ற பெயரும் உண்டு. இதற்குகாட்டுப் பூக்களால் ஆன மாலையைச்சூடுபவர் என்று பொருள். இம் மாலையில் பலவித நிறங்களைக் கொண்ட மலர்கள் இடம் பெற்றுஇருக்கும். இதனால் தான் தெய்வங்களுக்கு கதம்பம் (பல நிற பூக்களாலான மாலை) சூடும் பழக்கம் வந்தது.