பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
பழநி : பாதுகாப்பு கருதி, பழநி கோயிலில், 23 லட்ச ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, புதிய, "அனலாக் கேமரா 65 இடங்களில் பொருத்தப்படுகிறது. பழநி கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் மட்டுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் பாதுகாப்பு கருதி, மலைக் கோவிலில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில், ஏற்கனவே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 23 லட்சம் ரூபாய் செலவில், மலைக்கோவிலில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன் மேல்தளம், கீழ்தளம் மற்றும் அன்னதானக் கூடம், பஞ்சாமிர்தம் தயார் செய்யும் இடம், யானைப் பாதை, படிப்பாதை உட்பட, 65 இடங்களில், அனலாக் கேமிரா பொருத்தப்படுகிறது. கோவில் தலைமை அலுவலக, கம்ப்யூட்டர் சர்வருடன் இவை இணைக்கப்பட உள்ளது. றமே 22 முதல், இந்த கேமராக்கள் செயல்பட உள்ளன. கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேவஸ்தானம் மூலம் மலைக் கோவிலில் கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இதைத் தொடர்ந்து, பெரியநாயகியம்மன் கோவில், திருஆவினன்குடி கோவில், மாரியம்மன் கோவில்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்றார்.