பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
நிதி வசதியின்றி பூஜை செய்யப்படாமல் இருக்கும், கோவில்களுக்கு, அரசின் சார்பில், நிதி வழங்கி நடத்தப்படும், ஒரு கால பூஜை திட்டத்தை, மேலும், 500 கோவில்களுக்கு விரிவுபடுத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஒரு கால பூஜை கூட, செய்ய நிதி வசதி இல்லாத கோவில்களுக்கு, ஒரு கால பூஜை நடத்தும் வகையில், "ஒரு கால பூஜை திட்டம் 1986ம் ஆண்டு துவங்கப்பட்டது. பொதுமக்களும் பங்கேற்கும் வண்ணம், 1993ம் ஆண்டு, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பொதுமக்கள், கோவில் ஒன்றுக்கு, நன்கொடையாக, 2,500 ரூபாய் வந்தால், நிதி வசதியுள்ள கோவில்களின் உபரி நிதியிலிருந்து, 20 ஆயிரமும், கோவில் மற்றும் அறப்பணி நிதியிலிருந்து, 1,300 ரூபாயும், ஆலய மேம்பாட்டு நிதியிலிருந்து, 1,200 ரூபாயும், ஆக மொத்தம், 25 ஆயிரம் ரூபாய், கோவில் பெயரில், வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையிலிருந்து, குறிப்பிட்ட கோவிலின் "ஒரு கால பூஜை திட்டம் செயல்பட்டு வந்தது. பின், இத்திட்டம், நிதிப்பற்றாக்குறையால், முடங்கியது. ரூ.30 கோடி நிதி ; பின், நிரந்தர வைப்புத்தொகையாக, ஒரு லட்சம் வழங்கப்பட்டது. இதற்காகும், மொத்த செலவினத்தில், 59.48 கோடி ரூபாய், அரசு நிதியிலிருந்து, ஒரு முறை மானியமாகவும், 41 கோவில்களின் உபரி நிதியிலிருந்து, 30 கோடி ரூபா# நிதிமாற்றம் மூலமும், ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம், 11 ஆயிரத்து 931 கோவில்களுக்கும் வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. இவ்வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும், வட்டித் தொகையிலிருந்து, அனைத்து கோவில்களிலும், ஒரு கால பூஜை நடத்தப்பட்டது. இத்திட்டத்தை, மேலும், 539 கோவில்களுக்கு விரிவுபடுத்த அறநிலையத்துறை, முடிவு செய்துள்ளது. இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஒரு கால பூஜை நடக்காத கோவில் ஏதாவது இருக்கும் பட்சத்தில், அக்கோவிலுக்கு, பொதுமக்கள் சார்பில், 10 ஆயிரம் ரூபா# நன்கொடை வழங்கினால், அறநிலையத்துறை மூலம், 90 ஆயிரம் அளித்து, மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய், கோவில் பெயரில், வைப்பு நிதி உருவாக்கப்படும் என்றனர்.