பதிவு செய்த நாள்
18
மே
2013
10:05
மதுரை:திருப்பரங்குன்றத்தில், மே 25 வரை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. மே 24ல், வைகாசி விசாகமும், 25ல் மொட்டையரசு திருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாலகிருஷ்ணன் எஸ்.பி., தலைமையில், கோயில் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. குற்றங்களை தடுக்க, தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது; சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணித்தல்; கோயிலின் உட்புறம், வெளிபுறத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; பால் அபிஷேகம் செய்யும் இடத்தில், நெரிசலை தவிர்க்க, போலீஸ், கோயில் ஊழியர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும், போலீஸ் அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது; சன்னதி தெருவில் இடையூறாக கடைகள் இருக்கக்கூடாது; தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு வழியாக சென்று, கல்லூரி பின்புறம் வாகனங்களை "பார்க்கிங் செய்ய வேண்டும்; ரதவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் மண்டபங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கொட்டகைகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.