பதிவு செய்த நாள்
20
மே
2013
10:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 22ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், மிகவும் புகழ்பெற்றது வரதராஜப் பெருமாள் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். நடப்பாண்டு, உற்சவம் 22ம் தேதி துவங்குகிறது. உற்சவத்தையொட்டி, நேற்று இரவு, ஸ்ரீசெல்வர் உற்சவம் நடந்தது. நாளை காலை அங்குரார்ப்பணம், இரவு ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு நடந்தது. இன்று பகல் ஆழ்வார் திருநாள் (ஸ்ரீபெருமாள் திருமஞ்சனம்) மாலை 5:30 மணிக்கு, சிறுபுண்ணியகோடி விமானம் ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு நடைபெறும். வரும் 22ம் தேதி, அதிகாலை 2:30 மணி முதல் 3:40 மணிக்குள், கொடியேற்றத்துடன் கோலாகலமாக பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. அதைதொடர்ந்து காலை 4:00 மணி அளவில், தங்க சப்பரம் வாகனமும், மாலை சிம்ம வாகனத்திலும் பெருமாள் எழுந்தருள்வார்.
நிகழ்ச்சி நிரல்
1 நாள் காலை உற்சவம் மாலை உற்சவம்
2 ஹம்ச வாகனம் சூரிய பிரபை
3 கருடசேவை ஹனுமந்த வாகனம்
4 சேஷ வாகனம் சந்திர பிரபை
5 தங்க பல்லக்கு யாளி வாகனம்
6 தங்க சப்பரம் யானை வாகனம்
7 திருத்தேர் உற்சவம் ------
8 தொட்டி திருமஞ்சனம் குதிரை வாகனம்
9 ஆள்மேல் பல்லக்கு புண்ணியகோடி விமானம்
10 த்வாதசாராதனம் வெட்டிவேர் சப்பரம்
24ம் தேதி உள்ளூர் விடுமுறை
வரதராஜ பெருமாள் கோவில், கருட சேவை உற்சவத்தையொட்டி, வரும் 24ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பதிலாக, வரும் ஜூன் மாதம், 8ம் தேதி, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என, மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் தெரிவித்துள்ளார்.