கீழப்பாவூர் நரசிம்மபெருமாள் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2013 10:05
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் நரசிம்மபெருமாள் கோயில் வருஷாபிஷேகம் நாளை (22ம்தேதி) நடக்கிறது. கீழப்பாவூரில் பழமை வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்தை சேர்ந்த அலர்மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி மற்றும் நரசிம்மபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் வருஷாபிஷேக விழா நாளை (22ம்தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று (21ம்தேதி) பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, ஆராதனை, வேதபாராயணம், 108 கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் மற்றும் 16 வகை மலர்களால் மலர்யாகம் நடக்கிறது. நாளை (22ம்தேதி) விஷ்வக்சேன ஆராதனை, பகவத் பிரார்த்தனை, மூலமந்திர ஹோமம், புருஷஸீக்த ஹோமம், மகா விஷ்ணு ஜீக்த ஹோமம், விசேஷ அபிஷேக, ஆராதனை மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு பனையூர் ராஜராமன் நரசிம்ம அவதாரம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வரும் 23ம்தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் சங்கர மகாதேவ சர்மா பிரகலாத சரித்திரம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.