பதிவு செய்த நாள்
22
மே
2013
10:05
ஈரோடு: ஈரோடு கொங்காளம்மன் கோவிலில், ப்ரித்தியங்கரா தேவிக்கு பச்சை மிளகாய் அர்ச்சனை நடந்தது. ஈரோடு கொங்காளம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, ப்ரத்தியங்கரா தேவி அம்மன் சிலைக்கு, வாரந்தோறும் செவ்வாய் கிழமையன்று, காலை, 8 முதல், 11 மணி வரை, மிளகாய் அபிஷேகம் நடக்கிறது. தொழில் மற்றும் குடும்பத்தில் எதிரிகளால் நமக்கு துன்பம் நேரிட்டால், ப்ரத்தியங்கரா தேவிக்கு பச்சை மிளகாய் அபிஷேகம் செய்தால், எதிரிகள் தொல்லை விலகும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று காலை, 8 மணி முதல், தேங்காய், பழம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெய்தீபம், பன்னீர்திராட்சை, பூமாலை ஆகியவற்றோடு, ஒரு கிலோ பச்சைமிளகாயும் சேர்த்து, ப்ரித்தியங்கரா தேவிக்கு மிளகாய் அபிஷேகம் செய்யப்பட்டது. மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்தும் குவிந்த பக்தர்கள், எதிரிகள் தொல்லை நீங்க, பச்சை மிளகாய் அர்ச்சனையில் பங்கேற்றனர்.