பதிவு செய்த நாள்
27
மே
2013
10:05
காஞ்சிபுரம்: தங்க பல்லக்கு உற்சவத்தில், வரதராஜ பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்துஅருளினார். நாளை, பிரபல உற்சவமான தேரோட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரத்தில், வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இவ்வாண்டிற்கான உற்சவம் கடந்த, 22ம் தேதி துவங்கியது.நேற்று முன்தினம் காலை, 7:00 மணி அளவில், சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்தார். மாலை, 5:00 மணி அளவில், சந்திரபிரபை வாகன உற்சவம் நடந்தது.ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணி அளவில், சுவாமி, நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். மாலை, யாளி வாகன உற்சவம் நடந்தது.இன்று காலை, தங்க சப்பர வாகனத்தில், ஸ்ரீவேணுகோபாலன் திருக்கோலம் சூர்ணாபிஷேகமும், மாலை, யானை வாகன உற்சவமும். நாளை காலை, பிரபல உற்வசவமான தேரோட்டமும் நடைபெற உள்ளது.