பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார்கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த 19 ந்தேதி காப்புகட்டுதலுடன் பத்துநாள் திருவிழா துவங்கியது. தினமும் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளினார். இரவு,பகல் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரடி பூஜை நடந்தது. நேற்று மாலை சிங்கம்புணரி கிராமத்தினர், முன்னாள் எம்.எல்.ஏ., அருணகிரி தலைமையில் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து,தேரோட்டத்தை துவக்கினர்.தொடந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சேவுகா,ஓம் சேவுகா, என முழக்கமிட்டு தேர் வடம் பிடித்தனர்.விநாயகர் ரதம் முன் செல்ல,பூரணை,புஷ்கலை சமேத சேவுகப்பெருமாள் ஐயனார் பெரியதேரிலும்,பிடாரி அம்மன் சப்பரத்திலும் பவனி வந்தனர்.பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்தனர்.இன்று பகல் தீர்த்தவாரி ,இரவு சுவாமி மலர் பல்லக்கில் திருவீதி உலா,கலை,இசை நிகழ்ச்சி நடக்கிறது.