பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
செய்யூர்: பொலம்பாக்கம் முத்தாலம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா கோலாகலமாக நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொலம்பாக்கம் கிராமத்தில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கால் நடுதல் நிகழ்ச்சி மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, 25ம் தேதி, காலை 7:00 மணிக்கு, பொதுமக்கள் சார்பில், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 4:00 மணிக்கு, கரகம் ஜோடித்தலும், 4:30 மணிக்கு, கரகம் வீதி உலா நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு, செடல் விழாவும், மதியம் 2:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு, வாண வேடிக்கையுடன் அம்மன் தேர் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.