பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
அத்திமாஞ்சேரி: திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பள்ளிப்பட்டு அடுத்த, அத்திமாஞ்சேரி கிராமம் அருகே திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டு தீமிதி திருவிழா இம்மாதம், 15ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 17ம் தேதி பக்காசூரன் வதம் நடந்தது. 22ம் தேதி அர்ஜுனன் தபசு, நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு படுகளத்தில் துரியோதனனை பீமன் வீழ்த்தும் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. அன்றைய தினம் இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில், உள்ள நெருப்பு குண்டத்தில், அத்திமாஞ்சேரி மற்றும் அருகில் உள்ள, ஆந்திர மாநிலத்தை வனதுர்காபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். இரவு, 10:00 மணிக்கு பிறகு அர்ஜுனன், திரவுபதியம்மன் உற்சவர் திருவீதியுலா, மங்கள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் நடந்தது. இந்த தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, 17ம் தேதி முதல், நிறைவு நாள் வரை தினமும் பகல், 2:00 மணி ஹரிகதா கலாட்சேபம், இரவு, 10:00 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.