பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
மானாம்பதி: சின்ன இரும்பேடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில்களில், வைகாசி விழா, விளையாட்டு உற்சவத்துடன் நிறைவு பெற்றது. மானாம்பதி அடுத்த, சின்ன இரும்பேடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில்களில், ஆண்டுதோறும், வைகாசி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா கடந்த, 24ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி, விநாயகர், கன்னியம்மன், முத்துமாரியம்மன், ஸ்ரீரங்கம்மன், கங்கையம்மன், காளியம்மன், துர்கையம்மன் சன்னிதிகளில் மகா அபிஷேகமும், மாலை தீமிதி விழாவும் நடத்தப்பட்டது. அன்றைய தினம், முத்துமாரியம்மன் வாண வேடிக்கை முழங்க, வீதி உலா வந்தார். ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். 26ம் தேதி, பிரதான விழாவாக, கூழ்வார்த்தல் நடந்தது. கரகங்கள் எடுத்து ஊர்வலம் வந்தனர். நேற்று, விளையாட்டு உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.