Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருப்பெயர்ச்சி விழா: தாம்பத்ய ... வைஷ்ணவதேவி கோவிலில் தங்குமிடத்திற்கு அடிக்கல்! வைஷ்ணவதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி தணிகாசலம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

திருத்தணி: திருத்தணி தணிகாசலம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருத்தணி அக்கய்யா நாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்தது. இதற்காக,கோவில் வளாகத்தில் மூன்று யாக சாலைகள் மற்றும், 108 கலசங்கள் அமைக்கப்பட்டு, கடந்த, 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.கோவில் குருக்கள் நடராஜ சாஸ்திரி தலைமையில், நேற்று முன்தினம் ஐந்து குருக்கள் நவக்கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் தனபூஜை, இரண்டாம் கால பூஜை, சாந்தி பூஜை, மாலை, 6:00 மணிக்கு மூன்றாம்கால பூஜை மற்றும் தீபாராதனை நடத்தினர்.இதையடுத்து, நேற்று காலை, 6:00 மணிக்கு சுமங்கலி பூஜை நடந்தது. காலை, 9:50 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.காலை, 10:30 மணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கலசநீரை அங்கு கூடிஇருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:30 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் அலங்கரிப்பட்ட டிராக்டரில் எழுந்தருளி நகரத்தின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த கும்பாபிஷேக விழாவில், நகர்மன்றத் தலைவர் சவுந்தர்ராஜன், கவுன்சிலர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு, மலையப்ப சுவாமி தனது தேவியர்களான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar