செஞ்சி: இல்லோடு திரவுபதி அம்மன் கோவிலில் முத்து பல்லக்கு ஊர்வலம் நடந்தது.செஞ்சி தாலுகா இல்லோடு திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத உற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் விழாவாக 21ம் தேதி கூழ் வார்த்தல் விழா நடந்தது. 27ம் தேதி 13ம் நாள் விழாவாக முத்து பல்லக்கு ஊர்வலம் நடந்தது.இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு பாஞ்சாலி துகிலும் பரந்தாமன் அருளும் என்ற தலைப்பில் உதயராணியின் மகாபாரத இசை சொற் பொழிவு நடந்தது.இரவு 7 மணிக்கு திரைஇசை நடனமும், இரவு 10 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு முத்து பல்லக்கு ஊர்வலமும் நடந்தது.