பதிவு செய்த நாள்
30
மே
2013 
10:05
 
 தூத்துக்குடி: கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஷ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மன் கோயில் பொங்கல் வைகாசி திருவிழா நடந்தது. திருவிழா அன்று இரவு முளைப்பாரி ஊர்வலமும் மாவிளக்கு ஊர்வலமும் பல்வேறு சமுதாய பெண்கள் , பெண் குழந்தைகள் ஆகியோரால் செல்வ விநாயகர் கோயில் இருந்து மெயின் ரோட்டில் அமையப்பெற்ற மாலையம்மன் கோயிலுக்கு சென்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இரவு வணிக வைசிய நற்பணி மன்றத்தினரால் சுவாமிஅம்பாள் திருவீதி உலாவும் நடந்தது. மே 29 ம் தேதி மஞ்சள் நீராட்டு குழுவினரால் வணிக வைசிய சங்கத்தினர் பெரும் பகுதியாக வாழும் பகுதிகளில் மஞ்சள் நீராட்டு விழாவும் உறி அடித்திருவிழாவும் கொண்டாடப்பட்டது. கடந்த 24 ம் தேதி பொங்கல் திருவிழாவிற்கான கொடியேற்றத்துடன் துவங்கி ஒருவார காலமாக சமுதாயத்தினரால் தினமும் பட்டிமன்றம் வழக்காடு மன்றம் மற்றும் திரைப்பட மெல்லிசை விருந்து என தினமும் இரவில் வணிய வைசிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட கற்புக்கரசி கண்ணகி கலையரங்கில் நடந்தது. விழா ஏற்பாடுகளை சங்கத்தலைவர் குருசாமி , செயலாளர் பழனிக்குமார், பொருளாளர் நடராஜன் , வணிக வைசிய சங்க பள்ளிக்குழுத் தலைவர் வெங்கடேஷ், 12 வது வார்டு கவுன்சிலர் பரமசிவம் , திருக்கல்யாண அறங்காவலர் குழுத் தலைவர் ரத்தினவேல் இளைஞரணி தலைவர் வேல்முருகன் , நாகராஜன், தங்கமாரியப்பன், மாதவராஜ், பள்ளிச்செயலாளர் செல்வம், சுப்பிரமணியன், ஆசிரியர் நினைவு நர்சரி பள்ளி செயலாளர் மகாலிங்கம் மற்றும் சமுதாய பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.