பதிவு செய்த நாள்
30
மே
2013
11:05
குஜிலியம்பாறை: ஆர்.வெள்ளோட்டில், ராஜ விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. அனுக்கிரக பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, தீபாராதனையை தொடர்ந்து, நேற்று காலை 9.00 முதல் 10.30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தாந்தோன்றிமலை குருக்கள் ரெங்கராஜன் உள்ளிட்டோர், கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டனர். ஆர்.வெள்ளோடு, இடையபட்டி, நொச்சிப்பட்டி, பொன்னம்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், முத்தாலம்மன் கிராம கோயில் திருவிழா, மூன்று நாட்கள் நடக்க உள்ளதால், முதல் கட்டமாக விநாயகர் கோயில் கும்பாபிஷேக பணிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கிராம பெரியதனம் பி.குமரேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இடையபட்டி ஊர் முக்கியஸ்தர் எம்.குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.