பெருவாயல்: பெருவாயல் கெங்கையம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம் கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் அமைந்துள்ளது கெங்கையம்மன் கோவில். கடந்த, 28ம் தேதி அக்கோவிலில் திருவிழா துவங்கியது. அன்று காலை கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.மறுநாளான நேற்று முன்தினம் மாலை வாண வேடிக்கையுடன், கெங்கையம்மன் திருவீதி உலா நடந்தது. அதன் பின்னர் நடந்த உறியடி விளையாட்டில், ஏராளமான இளைஞர், பெரியவர்கள் கலந்து கொண்டு உறியடித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் பெருவாயல் மட்டுமின்றி, சற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டு சென்றனர்.