பதிவு செய்த நாள்
01
ஜூன்
2013
10:06
திருப்பதி : திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவைகளுக்கான, ஜூன் மாத குலுக்கல் முறையில் (லக்கி டிப்) உள்ள டிக்கெட்களின் விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. நடைபெற இருக்கும் ஆர்ஜித சேவைகளுக்கு, முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, திருமலை, மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில், குலுக்கல் முறையில் டிக்கெட்கள் தனியாக தரப்படுகின்றன. காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பக்தர்கள் தங்கள் பெயர், மொபைல் போன் எண், பெருவிரல் ரேகை ஆகியவற்றின் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவர்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு, எம்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்புவர். எஸ்.எம்.எஸ்., கிடைக்கப் பெற்ற பக்தர்கள், இரவு, 8:00 மணிக்குள் தங்கள் டிக்கெட்களை, விஜயா வங்கியில் பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவைகள் மற்றும் டிக்கெட்கள் விவரம் வருமாறு:
ஜூன் 4ம் தேதி - தோமாலை 7; அர்ச்சனை 25
5ம் தேதி - அர்ச்சனை 16
6 ம் தேதி- தோமாலை 13; அர்ச்சனை 16
7ம்தேதி - மேல்சாட் வஸ்திரம் 1; அபிஷேகம் 5
11ம் தேதி - தோமாலை 4; அர்ச்சனை 3
12ம் தேதி - தோமாலை 12; அர்ச்சனை 8
13 ம் தேதி- தோமாலை 5; அர்ச்சனை 17
14ம் தேதி - மேல்சாட் வஸ்திரம் 3; அபிஷேகம் 3
18 ம் தேதி- தோமாலை 3; அர்ச்சனை 9
19ம் தேதி - அர்ச்சனை 26
20 ம் தேதி- தோமாலை 10; அர்ச்சனை 11
21ம் தேதி - மேல்சாட் வஸ்திரம் 3; அபிஷேகம் 4
25ம்தேதி - அர்ச்சனை 4
26ம் தேதி - தோமாலை 3; அர்ச்சனை 6
27ம்தேதி - தோமாலை 10; அர்ச்சனை 10
28 ம் தேதி- மேல்சாட் வஸ்திரம் 3
பக்தர்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. குழந்தைகளைக் கண்டுபிடிக்க தனிப்படை : திருமலை வரும் பக்தர்களின், காணாமல் போகும் குழந்தைகளை, கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக, நகர்ப்புற காவல் ஆணையர், ராஜசேகர் பாபு தெரிவித்தார். திருமலைக்கு தினமும், ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் வருகின்றனர். பக்தர்களின் குழந்தைகள் காணாமல் போவதாக, அடிக்கடி தகவல் வருகிறது. கடந்த, நான்கு நாட்களுக்கு முன், திருமலையில் காணாமல் போன குழந்தை, கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிக்க, தனிப்படையை தயார் செய்துள்ளதாக, ராஜசேகர் பாபு தெரிவித்தார்.