Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேர்த் திருவிழாவை கோடையில் ... நட்சத்திர அலங்காரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரச்னை தீரலையா! செவ்வாயில் பேசுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
05:06

பிரச்னை இல்லாத மனிதர்கள் உண்டா! அதிலும் சிலபிரச்னைகள் தீர்வே இல்லாமல் இழுத்தடித்து செல்லும். அவற்றை செவ்வாய்க் கிழமையன்று பேசி முடித்தால் தீர்வு கிடைக்கும் என்கிறார் ஜோதிட முரசு மிதுனம் செல்வம். நமது வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் இரு கண்களாக இணைந்தே இருக்கின்றன. வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விஷயங்களையும், விசேஷங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் காலம், நேரம், சகுனம் பார்ப்பது என்பது தொடர்ந்து வரும் நிகழ்வுதான். அதற்காக ஆதாரம், சான்றுகள் இல்லாமல் தலைகால் வைத்து, இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! இந்த நேரம் பொல்லாத நேரம்! இந்த நாள் மோசமான நாள்! என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர். இதனடிப்படையில் ஒதுக்கப்பட்ட கிழமை தான் செவ்வாய். உண்மையில், செவ்வாய்க்கிழமையை ஒதுக்க வேண்டும் என்பதற்கு எந்தவித சாஸ்திர ஆதாரமும் இல்லை. மார்கழி மாதத்தை பீடை மாதம் என்பார்கள். ஆனால், உண்மையில் பீத(பீடு) மாதம் என்பது தான் பீடைமாதம் என வழக்கத்தில் வந்து விட்டது. மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணரும் கீதையில் கூறுகிறார். மார்கழி மாதத்திற்கு வந்த கதி தான் செவ்வாய்க் கிழமைக்கும் வந்துவிட்டது. இன்னும் சில ஜோதிட ஆதாரங்களையும் சொல்லலாம். நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்லும் போது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஆனால், சப்தரிஷி வாக்கியங்களில் இதற்கு ஆதாரமோ, சான்றுகளோ இல்லை. இது போலத்தான், கிழமைகளைப் பற்றிய கருத்துகளும் மக்கள் மத்தியில் பதிந்து விட்டன.  கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாள் என்பதால், செவ்வாய்க்கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்று தான் பொருள். சுபநிகழ்ச்சிகளையே மங்கள நிகழ்ச்சிகள் என்று சொல்வர். இவ்வாறு இருக்கும்போது, செவ்வாய்க்கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான அங்காரகனையும் மங்களன் என்ற வார்த்தையால் குறிப்பிடுவர்.  ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பூமாதேவியின் அம்சமாவார். ஆகையால்தான், இவரை பூமிகாரகன் என சாஸ்திரம் புகழ்கிறது. நம் உடம்பில் ரத்தம், வெப்பம் ஆகியவற்றிற்கும் செவ்வாயே காரணம். பெண்கள் பூப்படைதல், திருமணம், மண், மனை, வீடு, சகோதரன், உத்தியோகம் போன்றவற்றிற்கு எல்லாம் செவ்வாயே அடிப்படைக்காரணம்.  நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் உள்ளன. இங்கு நாம் செவ்வாய்க் கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கலநிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அவர்கள் செவ்வாயை மங்கள்வார் என்றுகுறிப்பிடுகின்றனர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர்.  செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன. இந்தநாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்துஇடலாம். சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம். வேலையில் சேரலாம். பூமிபூஜை போடலாம். வீடு மாறலாம். பால் காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத நிலைமைக்கு கூட வாய்ப்பு உண்டு. இந்தநாளில் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும் வினையும் நம்மை எதுவும் செய்யாது. செவ்வாய்க்கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து நின்று பலன் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar