களையிழந்த உலகளந்த பெருமாள் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2013 10:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பராமரிப்பில் இருக்கும் தெப்பக்குளம் களையிழந்து, சீர் கெட்டுப் போய் இருப்பதை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான்கு மாடம்திருக்கோவிலூர் மலையமாநாட்டின் தலைநகரம், இதனை மெய்ப்பொருள்நாயனார், தெய்வீக மன்னன் உட்பட பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதனால் நகரம் நான்குமாட வீதியுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. நிலத்தடி நீரை பராமரிக்க தெப்பக்குளம், தீர்த்தக்குளங்கள் ஊருக்கு மத்தியில் கட்டப்பட்டது.பாதாள கால்வாய்இதற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்த, ஏரியில் இருந்து பாதாள கால்வாய் அமைக்கப்பட்டது. இதனால் தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்தால் ஏரி நிரம்பும், ஏரியில் இருந்து பாதாள கால்வாய் மூலம் குளம் எப்போதும் நிரம்பி வழியும்.இதனால் கோடைக் காலத்தில்கூட குளத்தில் தண்ணீர் நிரம்பி நகரில் நிலத்தடி நீரை சமமாக வைத்திருக்கும், பிரம்மோற்சவத்தின் போது நடக்கும் தெப்ப உற்சவத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருவர். கைவிட்ட பராமரிப்புசிறப்பு வாய்ந்த தெப்பக்குளத்தை கோவில் நிர்வாகம் பராமரிக்காமல் கைவிட்டுவிட்டது. பேரூராட்சி நிர்வாகம் செடிகொடிகளை அகற்றுவதுடன் நிறுத்திக் கொண்டது. இதனால் தெப்பக்குளத்தின் மத்தியில் இருக்கும் தீர்த்த மண்டபம் இடிந்து தரை மட்டமாகி விட்டது. கிட்டத்தட்ட 10 நூற்றாண்டுகள் பழமையான பாதாள கால்வாய் தூர்ந்து ஏரியில் இருந்து தண்ணீர் வருவது கடந்த ஆண்டு நின்றது. இதனால் தற்போது குளம் வற்றி குட்டை போல் பொலிவிழந்து காணப்படுகிறது.வறண்ட குளத்தை தூர் வாரி, இடிந்த மண்டபத்தை சீரமைக்க வேண்டும். பல நூற்றாண்டுகள் பழமையான பாதாள கால்வாயை, புராதான நகரத்தின் பெருமையை பாதுகாக்கும் வகை யில் செலவை பார்க்காமல் சீரமைக்க வேண்டும்.பராமரிப்பில் போட்டிஇதனை சீரமைப்பது இந்து சமய அறநிலையத் துறையா, பேரூராட்சி நிர்வாகமா என்ற போட்டிக்கு இடம் கொடுக்காமல் பழமையான குளத்தை சீரமைத்து குளத்தின் புனிதத்தை பேணிகாக்க வேண்டியது அரசின் கடமை.