பதிவு செய்த நாள்
05
ஜூன்
2013
10:06
திருக்கழுக்குன்றம்: சாலூர் திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் கோலாகலமாக நேற்று நடந்தது.திருக்கழுக்குன்றம் அருகே, சாலூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தீ மிதி உற்சவ திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழா, மே மாதம் 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மகாபாரத சொற்பொழிவு, இரவு, நாடகம் நடந்தது.நேற்று காலை, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தீ மிதி விழாவில், குண்டத்தில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில், சாலூரை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.