அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அவலூர்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடந்தது.இரவு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சின்னராஜி, சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், சின்னையா, அர்ச்சுணன் கலந்து கொண்டனர்.